உலகம்

ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் தீயணைப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

23/03/2026 04:48 PM

நியூ யார்க், 23 மார்ச் (பெர்னாமா) -- அமெரிக்கா, நியூயார்க் லாகார்டியா விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் தீயணைப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில், அதன் விமானியும் துணை விமானியும் உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

76 பேருடன் கனடா, மோண்ட்ரீல் நகரிலிருந்து புறப்பட்ட அந்த விமானம், ஓடுதளத்தில் தரையிறங்கிய போது எதிர்பாராத விதமாக தீயணைப்பு வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தின் காரணமாக விமானத்தின் முன்பகுதி கடுமையாகச் சேதமடைந்தது.

காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)