விளையாட்டு

2027 சீ விளையாட்டுப் போட்டி: மேற்கு ஆசிய மோதல் மலேசியாவின் தயார்நிலை பணிகளைப் பாதிக்கவில்லை

23/03/2026 04:54 PM

புத்ராஜெயா, 23 மார்ச் (பெர்னாமா) -- மேற்கு ஆசியாவில் நிலவும் தற்போதைய பொருளாதாரச் சவால்களும் மோதல்களும், 2027-ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்தும் மலேசியாவின் தயார்நிலைப் பணிகளைப் பாதிக்கவில்லை.

அந்த பதற்ற சூழ்நிலையைத் தொடர்ந்து சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியின் ஏற்பாட்டு தரம் நிச்சயம் உறுதி செய்யப்படுவதோடு பாதுகாக்கப்படும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் டாக்டர் முஹமட் தௌஃபிக் ஜொஹாரி தெரிவித்தார்.

சரவாக், பினாங்கு, ஜோகூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் ஏற்கனவே உள்ள வசதிகளைப் பயன்படுத்துவது செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் அடங்கும் என்று அவர் கூறினார்.

''புதிய வசதிகளைக் கட்டுவதற்கு நாங்கள் அதிக தொகையைச் செலவிட மாட்டோம். ஏனென்றால், பெரும்பாலான அல்லது ஏறக்குறைய அனைத்து விளையாட்டு அரங்கங்களையும் பார்க்கும்போது, ​​2027 சீ விளையாட்டுப் போட்டிக்காக அங்கு ஏற்கனவே முழுமையான வசதிகள் தயாராக உள்ளன. எனவே, அதிக செலவாகும் புதிய வசதிகளையோ அல்லது உள்கட்டமைப்புகளையோ உருவாக்குவதை விட, தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்துவது அல்லது தரம் உயர்த்துவதுதான் மிக முக்கியமானது,'' என்று அவர் மேலும் கூறினார்.

அண்மையில் பெர்னாமா தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு சிறப்பு நேர்காணலில் அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

2027 சீ விளையாட்டுப் போட்டி, அடுத்த ஆண்டு செப்டம்பர் 18 தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)