பொது

பட்டாசு கடையில் மீண்டும் தீ

24/03/2026 04:28 PM

ஜோகூர் பாரு, 24 மார்ச் (பெர்னாமா) -  நேற்றிரவு, ஜோகூர் பாரு, கம்போங் டத்தோ சுலைமான் மந்திரி, ஜாலான் பூங்கா ரோஸ், மஜிட் கோர்னர் 1C-இல் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்த அச்சம்பவம் குறித்து, இரவு மணி 8.32-க்கு  தங்கள் தரப்பிற்கு அவசர அழைப்பு கிடைத்ததாக, லார்க்கின் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டு கொமண்டர் நாகிஷ் நெக்மாட்கூறினார்.  

பட்டாசுக் கடை 90 விழுக்காடு தீக்கிரையாகிய நிலையில், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Proton Gen-2 ரக கார் 80 விழுக்காடும், ஓர் உணவு லாரி 73 விழுக்காடும் சேதமடைந்ததாக நாகிஷ் நெக்மாட் தெரிவித்தார்.  

இச்சம்பவத்தில் உயிர் இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

11 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், இரவு மணி 8.42-க்கு தீ கட்டுப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.


-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)