வங்காளதேசம், 26 மார்ச் (பெர்னாமா) -- வங்காளதேசத்தில், பயணிகள் பேருந்து ஒன்று feri-இல் இருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர்.
ராஜ்பாரி மாவட்டத்தில் உள்ள டவுலாத்தியா படகு முனையத்தில், சுமார் 40 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்தப் பேருந்து மாலையில் பத்மா ஆற்றில் கவிழ்ந்தது.
பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களை ஏற்றிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஃபெரியில் அந்த வாகனம் கொண்டுச் செல்லப்பட்டபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.
நேற்று மாலை அப்பேருந்து ஆற்றிலிருந்து வெளியேற்றப்பட்டப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பேருந்தினுள் சிக்கிய நிலையில் இருந்தனர்.
உயிரிழந்தவர்களில் ஏழு பெண்களும் இரண்டு குழந்தைகளும் அடங்குவர்.
பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மட்டுமே நீந்தி கரையேறிய வேளையில், மற்றவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக அல்லது காணாமல் போனதாக ஃபெரி முனைய போக்குவரத்து மேற்பார்வையாளர் கூறியுள்ளார்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)