அந்தால்யா, 26 மார்ச் (பெர்னாமா) -- இவ்வாண்டு உலகக் கிண்ணத்திற்கான முக்கியத் தயார்நிலையில் ஒரு பகுதியாக, ஈரான் தேசிய அணி, துருக்கியில் இரண்டு நட்புமுறை போட்டிகளுக்காகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
அந்தால்யாவிற்குத் தெற்கே உள்ள பேலேக் என்ற இடத்தில் அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்நாட்டை உள்ளடக்கிய மத்திய கிழக்கு மோதலுக்கு இடையில், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் அணிகளில் ஒன்றாக ஈரான் உருவெடுத்துள்ளது.
மத்தியதரைக் கடற்கரை நகரத்திற்கு அருகிலுள்ள ஓய்வு விடுதி பகுதியில் அவ்வணி பயிற்சி மேற்கொள்வது காணொளி வழியாக காணப்படுகிறது.
ஈரானிய அணிக்கு எந்தஒரு இடையூறும் ஏற்படாமல் இருக்க, ஊடகங்களுக்கு எந்தப் பேட்டியும் அளிக்கப்படவில்லை,
மேலும், ஊடக அணுகலும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது.
ஈரான், வெள்ளிக்கிழமை அன்டால்யாவில் நைஜீரியாவுக்கு எதிராகவும், செவ்வாய்க்கிழமை கோஸ்டா ரிகாவுக்கு எதிராகவும் விளையாடும்.
இந்த நட்புப் போட்டி முதலில் ஜோர்டானில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அமெரிக்க-ஈரான் போர் வெடித்ததைத் தொடர்ந்து துருக்கிக்கு மாற்றப்பட்டது.
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெறவிருக்கும் உலகக் இண்ண இறுதிப் போட்டிகளுக்கான தகுதியை உறுதி செய்த முதல் அணிகளில் ஈரானும் ஒன்றாகும்.
மத்திய கிழக்கில் மோதல் நிலவினாலும், இந்த உலக கிண்ண் போட்டியிலிருந்து விலகும் எண்ணம் ஈரானுக்கு இல்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)