உலகம்

யாகி சூறாவளி ஹைனான் மாகாணக் கரையைக் கடந்தது

07/09/2024 08:18 PM

ஹைனான், 07 செப்டம்பர் (பெர்னாமா) -- இவ்வாண்டின் ஆசியாவின் பலம் வாய்ந்த சூறாவளியாக கருதப்படும் யாகி சூறாவளி, சீனாவின் ஹைனான்  மாகாணத்தின் கரையை கடந்தது.

இதனால், வெள்ளிக்கிழமை, அப்பகுதிகளில் கனமழை பெய்தததோடு, ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

யாகி சூறாவளி மணிக்கு 234 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

2024 ஆம் ஆண்டில் யாகி சூறாவளி உலகின் இரண்டாவது மிக சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பலத்த காற்றினால் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாரத் தொடக்கத்தில், பிலிப்பைன்ஸ் வடப்பகுதியில் மையம் கொண்ட யாகி சூறாவளியினால் அந்நாட்டின் Wenchang எனும் நகரில் 16 பேர் உயிரிழந்தனர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)