உலகம்

ஆப்கானிஸ்தான் & பாகிஸ்தான்: தீவிரமடையும் எல்லை தாண்டிய சண்டை

27/02/2026 06:53 PM

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லை, 27 பிப்ரவரி (பெர்னாமா) -- ஆப்கானிஸ்தானிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே பல மாதங்களாக நீடித்து வரும் பதற்றங்கள் மற்றும் மோதல்களைத் தொடர்ந்து எல்லை தாண்டிய சண்டை தீவிரமடைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் உள்ள தலிபான் அரசாங்கத்தின் மீது குறிவைத்து பாகிஸ்தான் இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியதாக இரு நாடுகளின் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் தற்காப்பு அமைச்சர் இந்த மோதலை வெளிப்படையான போர் என்று விவரித்துள்ளார்.

எல்லையில், பல பகுதிகளில் உள்ள தலிபான் நிலைகள், தலைமையகங்கள் மற்றும் வெடிமருந்து கிடங்குகள் மீது வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்தாக்குதலில், இரு தரப்பினரும் பெரும் இழப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் பொறுமை இழந்துவிட்டதாகவும், ஆப்கானிஸ்தானுடன் வெளிப்படையான போரில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டின் தற்காப்பு பாதுகாப்பு அமைச்சர் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள், பாகிஸ்தான் மீது தாக்குதல்களை மேற்கொண்ட பின்னர் தொடங்கப்பட்ட கசாப் நடவடிக்கையின் ஒரு பகுதியாகப் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)