உலகம்

செப்.21-இல் இலங்கையின் அதிபர் தேர்தல்

15/09/2024 05:44 PM

இலங்கை, 15 செப்டம்பர் (பெர்னாமா) -- மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் இலங்கையில் வரும் சீர்திருத்தங்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான அதிபர் தேர்தல் இம்மாதம் 21ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
 
இத்தேர்தலில், நடப்பு அதிபர் ரணில் விக்கிரம சிங்கே, முதன்மை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரான அனுரகுமார திசாநாயக்கா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக ஏற்பட்ட மோசமான நிதி நெருக்கடியினால் இலங்கை பெரும் வீழ்ச்சியுடன் போராடி வருகிறது.

குறிப்பாக, வெளிநாட்டு முதலீடுகள் சரிவு கண்டதால், அந்நாட்டு பொருளாதார வீழ்ச்சி மோசமாகியதுடன், 2022ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடனை திரும்ப செலுத்துவதிலும் இலங்கை பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

இலங்கையில் உள்ள இரண்டு கோடியே இருபது லட்சம் மக்கள் தொகையில், சுமார் ஒரு கோடியே எழுபது லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)