பொது

அனைத்து அம்சங்களிலும் ஜே.கே.எம்-இன் பங்களிப்பு மேம்படுத்தப்பட வேண்டும் -- சாஹிட்

19/09/2024 08:14 PM

ஷா ஆலம், 19 செப்டம்பர் (பெர்னாமா) -- G-I-S-B-H எனப்படும் Global Ikhwan Service and Business Holdings நிறுவனம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் மட்டுமின்றி சிறார் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் சமூக நலத்துறை JKM-மின் பங்களிப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி வலியுறுத்தி உள்ளார்.

இதன் வழி, அவர்களின் எதிர்காலம் புறக்கணிக்கப்படாமல் மீண்டும் சீரமைத்து நல்வழிக்கு கொண்டு வர முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

அது தொடர்பிலான , அறக்கட்டளைகளை நிறுவுவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்த விசயங்களை அமைச்சரவை விவாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சு அல்லது உயர்கல்வி அமைச்சு கல்வியின் அம்சங்களை இதில் ஆராயலாம்.

குறிப்பாக கல்வித் துறையில் அல்லது தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் பயிற்சித் திட்டங்கள், அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கும் என்றும் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)