பொது

மக்கோத்தா: வெற்று வாக்குறுதிகளை அளிக்க விருப்பமில்லை - தே.மு வேட்பாளர்

19/09/2024 08:17 PM

குளுவாங் , 19 செப்டம்பர் (பெர்னாமா) -- மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான கொள்கை அறிக்கையானது, 2030-இல் முன்னேற்றமடைந்த ஜோகூர் மற்றும் மலேசிய மடானி அம்சங்களில் அமைய வேண்டும் என்று தேசிய முன்னணி வேட்பாளர் சைட் ஹுசேன் சைட் அப்துல்லா கூறுகின்றார்.

அம்மாநில மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டிருப்பதால், வெற்று வாக்குறுதிகளை மட்டுமே அளிக்க விரும்பாத அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விரு அணிகளின் இரண்டாம் ஆட்டம் வரும் அக்டோபர் முதலாம் தேதி ஜேடிதியின் சொந்த மண், சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடைபெறவிருக்கின்றது.

அந்தச் சிறப்பு கொள்கை அறிக்கை இன்னும் கலந்தாய்வில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும், இச்சட்டமன்றத்தில் உள்ள 66,318 வாக்காளர்களின் ஆதரவை பெறுவதற்காக வெற்று வாக்குறுதிகளை அளிக்க தாம் விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த டத்தோ ஷரிஃபா அசிஸா சைட் சையின் விட்டுச் சென்ற தீர்மானங்களைத் தொடர்வதற்கு தாம் முடிவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இம்மாதம் செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலில், தேசிய முன்னணிக்கும் பெரிக்கத்தானுக்கும் இடையில் போட்டி நிலவுகிறது.

முன்கூட்டியே வாக்களிப்பு செப்டம்பர் 24ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது.


-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)