பொது

மூப்படைந்த மரங்களை பாதுகாக்கும் வழிகளை அரசாங்கம் ஆராயும்

19/09/2024 08:18 PM

ஷா ஆலம், 19 செப்டம்பர் (பெர்னாமா) -- நாட்டில், மூப்படைந்திருக்கும் மரங்களை வெட்டுவதற்கு பதிலாக, அவற்றை பாதுகாப்பதற்கான நீண்ட கால நடவடிக்கைகளை அரசாங்கம் ஆராயும்.

அதிகம் மதிப்புள்ள மரங்களை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் சிறந்த முறையை மதிப்பீடு செய்ய ஊராட்சி மன்றம் மூலம் மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கம் இடையே ஒத்துழைப்பு இருப்பதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

'''ஆனால் நடைமுறையின் அடிப்படையில், வெட்டாமல் இருக்க எப்படி நீண்ட கால முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்பதை நாம் பார்க்க வேண்டும். ஆனால், மரம் தொடர்ந்து இருக்கவும் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு அல்லது அப்பகுதி வழியாக செல்பவர்களுக்கு தீங்கு விளைவிக்காதவாறு சில முறைகளைப் பயன்படுத்த வேண்டும்,'' என்றார் அவர்.

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி ஜூலை வரையில், மரங்கள் விழுந்தது தொடர்பில், தங்கள் தரப்புக்கு 2,575 அவசர அழைப்புகள் வந்ததாகவும்,

அதில் சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையில் சம்பவங்கள் பதிவானதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியிருந்தது.

இன்று வியாழக்கிழமை சிலாங்கூர், ஷா ஆலமில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு வரலாறு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)