பொது

லெபனான் தாக்குதலுக்கு மலேசியா கண்டனம்

20/09/2024 05:45 PM

பூச்சோங், 20 செப்டம்பர் (பெர்னாமா) -- செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் லெபனான் முழுவதும் தகவல் தொடர்பு சாதனங்களை வெடிபொருட்களாகப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு மலேசியா கண்டனம் தெரிவித்துள்ளது.

அத்தாக்குதல் மிகவும் மனிதாபிமானமற்ற ஒரு செயலாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடியிருக்கின்றார்.

''செய்தி ஏற்பியைப் பயன்படுத்தி இஸ்ரேலில் இருந்து தகவல் சாதனப் பொருட்கள் மீதான முரட்டுத்தனமான தாக்குதலைக் கண்டித்து, அதைப் பயன்படுத்தும் அனைத்து மக்களும் பாதிக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையையில் குறிப்பிட்டுள்ளது. அது ஒரு மனிதாபிமானமற்ற செயலாகும், அவர்கள் இராணுவப் படை அல்ல, பெண்களும் குழந்தைகளும் ஆவர். அதனால் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்,'' என்றார் அவர். 

இன்று, பூச்சோங் டாருல் சலாம் பள்ளிவாசலில் நடைபெற்ற வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவ்விவகாரம் குறித்து பிரதமர் கருத்துரைத்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]