கராச்சி, 03 நவம்பட் (பெர்னாமா) -- பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர்.
பட்டாசுகள் வெடித்து, அகல் விளக்கேற்றி, ஆலயங்களில் வழிபாடு செய்து, அவர்கள் தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.
பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் உள்ள ஸ்வாமிநாராயன் ஆலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது.
அதில், அந்நகரில் வசிக்கும் நூற்றுக்கணக்கான இந்துக்கள் கலந்து கொண்டனர்.
ஆலயத்தின் வெளியே பட்டாசுகளை வெடித்தும் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இனிப்பு பலகாரங்களை பரிமாறிக் கொண்டும் அவர்கள் இவ்வருட தீபாவளியைக் கொண்டாடினர்.
பாகிஸ்தானில் சுமார் 45 லட்சம் இந்துக்கள் வசித்து வருகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)