அரசியல்

தோல்வி கண்டாலும் ஜ.செ.க-ஐ பிரதிநிதித்து கோபிந்த் அமைச்சரவையில் நீடிப்பார் - லோக்

11/11/2024 06:26 PM

செபெராங் பிறை, 11 நவம்பர் (பெர்னாமா) -- நேற்று நடைபெற்ற 2024-2027 சிலாங்கூர் ஜ.செ.க கட்சி தேர்தலில் தோல்வி கண்டாலும், அக்கட்சியைப் பிரதிநிதித்து கோபிந்த் சிங் டியோ தொடர்ந்து அமைச்சரவையில் இருப்பார்.

இலக்கவியல் அமைச்சருமான அவர், ஜ.செ.க-வின் தேசிய துணை தலைவராக தலைமைத்துவத்தில் தொடர்ந்து முக்கிய பங்காற்றுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் வலியுறுத்தினார்.

''நேற்று சிலாங்கூரில் தோல்வி கண்டதால், அவர் விலக வேண்டும் என்று அர்த்தமல்ல. நிச்சயமாக இல்லை. அவர் கட்சியைப் பிரதிநிதித்து அமைச்சரவையில் இருப்பார் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். கடந்த காலங்களில் சிலாங்கூர் ஜ.செக.-வில் பங்களித்ததற்கு நான் கோபிந்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார் அவர்.

மாநில கட்சி தேர்தலில் கோபிந்த் சிங் தோல்வி கண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், ஜனநாயக செயல்முறையில் அது வழக்கமான ஒன்றாகும் என்று லோக் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)