உலகம்

தற்கொலைக் வெடிகுண்டுத் தாக்குதலை தொடர்ந்து இரயில் சேவை தற்காலிக நிறுத்தம்

12/11/2024 05:10 PM

கராச்சி, 12 நவம்பர் (பெர்னாமா) -- பாகிஸ்தானின் இரயில் சேவை நிறுவனம் திங்கட்கிழமை அனைத்து இரயில் பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்தியது.

அந்நாட்டில் வார இறுதியில் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த தற்கொலைக் வெடிகுண்டுத் தாக்குதலில் ராணுவ வீரர்கள், ரயில் சேவை ஊழியர்கள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இரயில் பயணங்கள் நான்கு நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் இரயில் சேவை நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டா நகரில் உள்ள ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள பிரிவினைவாத பலோச் விடுதலை இராணுவம் பாகிஸ்தான் படைகளை குறிவைத்தே இத்தாக்குதலை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளது.

இத்தாக்குதலில் குறைந்தது 62 பேர் காயத்திற்கு ஆளாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில் சேவைகள் பலுசிஸ்தானின் பொருளாதாரத்திற்கு முக்கியமான ஒன்றாகும்.

குவெட்டாவிலிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர்.

இந்நிலையில், சுமார் 100 பயணிகள் ரயிலுக்கு காத்திருக்கும்போது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]