புதுடெல்லி, 22 ஏப்ரல் (பெர்னாமா) -- இந்தியாவுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி வேன்ஸ் நேற்று அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
குடும்பத்திருடன் சென்றிருந்த ஜே.டி வேன்சை மோடி வரவேற்று உபசரித்தார்.
ஜே.டி வேன்சின் குழந்தைகளுடன் மோடி சிறிது அலவலாவிய காணொளியை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதன் பின்னர், மோடியுடன் நடத்தப்பட்ட சந்திப்பிப் வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இரு நாட்டு உறவுகளையும் வலுப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் கூறியது.
ஜே.டி வேன்சின் மனைவி உஷா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]