பொது

பொறுப்பற்ற தரப்பால் மீண்டும் தொகுக்கப்பட்ட பிரதமரின் நேர்காணல்

15/11/2024 06:27 PM

புத்ராஜெயா, 15 நவம்பர் (பெர்னாமா) -- இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான போர் தொடர்பில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைத்துல ஊடகம், CNN-க்கு வழங்கிய நேர்காணலின் காணொளிகள் பொறுப்பற்ற சில தரப்பினரால் மீண்டும் தொகுக்கப்பட்டுள்ளன.

தொகுக்கப்பட்ட அக்காணொளிகளில் பிரதமரின் கருத்து இடம்பெறவில்லை.

மாறாக, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும் தற்காத்துக் கொள்ளும் நாட்டின் உரிமையையும் அரசாங்கம் அங்கீகரிப்பதாக அதில் காட்டப்பட்டிருப்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பேச்சாளரான ஃபஹ்மி ஃபட்சில் சாடியிருக்கின்றார்.

''இவற்றை மீண்டும் தொகுத்தவர்களை எனக்கு தெரியும். அவர்களின் இயல்பும் இதுதான். இங்கும் அவர்கள் தவறு செய்திருக்கின்றனர்,'' என்றார் அவர்.

இவ்விவகாரத்தின் உள்ளடக்கத்தை ஆராயும்படி மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி-ஐ ஃபஹ்மி பட்சில் கேட்டுக் கொண்டார்.

மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் சட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]