கோலாலம்பூர், 18 நவம்பர் (பெர்னாமா) -- 12ஆவது மலேசியத் திட்டம், RMK12இல் நான்காம் கட்ட திட்டங்களுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டைக் காட்டிலும் சபா மற்றும் சரவாக்கின் செலவீன அடைவுநிலை குறைவாகவே பதிவாகியுள்ளது.
அவ்விரு மாநிலங்களும் முறையே 667 கோடி ரிங்கிட் மற்றும் 581 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டைப் பெற்றன.
எனினும், அவற்றின் செலவீன அடைவுநிலை முறையே 46.7 மற்றும் 54.43 விழுக்காடு மட்டுமே என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தாபா தெரிவித்தார்.
சபா மற்றும் சரவாக்கில், RMK12இன் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அதன் அமலாக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர் சலிஹா குறிப்பிட்டார்.
''தீபகற்ப மலேசியாவில் குறைவான அடைவுநிலையைப் பதிவு செய்த மாநிலம் கெடாவாகும் அதாவது 53.43% விகிதம். எனவே, 172 திட்டங்களைக் கொண்ட பெர்லிசைக் காட்டிலும் சபா மற்றும் சரவாக்கில் அதிகமான எண்ணிக்கையிலான திட்டங்கள் அதாவது முறையே 1,244 மற்றும் 1,124 ஆகும், '' என்றார் அவர்.
பகாங் அதிகமான செலவின அடைவுநிலையை அதாவது 74.65 விழுக்காடாக பதிவு செய்துள்ளது.
அதை தொடர்ந்து மலாக்கா 74.27 விழுக்காட்டு செலவின அடைவுநிலையைப் பதிவு செய்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)