புத்ராஜெயா, 20 நவம்பர் (பெர்னாமா) -- இம்மாதம் 24ஆம் தேதியுடன் பிரதமர் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் வேளையில், நாட்டின் திட்டங்களைத் தொடருவதற்கு டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தென் கொரியாவிற்கு அலுவல் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வியூக ஒத்துழைப்பு, மேலும் வலுப்படுத்துவதை உறுதி செய்ய பிரதமரின் இப்பயணம் முக்கியம் என்று ஒருமைப்பாட்டு அமைச்சின் பேச்சாளரும், தொடர்பு அமைச்சருமான ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
"எம்சிஎம்சி உட்பட பல்வேறு அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களின் உறவை மேம்படுத்துவதும், வர்த்தக மற்றும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதும் பிரதமர் 24-ஆம் தேதி தென் கொரியாவிற்கு மேற்கொள்ளும் அதிகாரப்பூர்வ பயணத்தின் நோக்கம், " என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற தொடர்பு அமைச்சின் மாதந்திர கூட்டத்தில் கலந்து கொண்டு, ஃபஹ்மி ஃபட்சில் செய்தியாளர்களிடம் அதனைக் கூறினார்.
மலேசியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதோடு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் உட்பட அமைச்சுகளும் நிறுவனங்களும் சம்பந்தப்பட்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பிரதமர் கையெழுத்திடவிருப்பதாக, ஃபஹ்மி தெளிவுப்படுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)