பொது

இன்று தொடங்கியது ஈராண்டு மடானி விற்பனை திட்டம்

22/11/2024 05:58 PM

கோலாலம்பூர், 22 நவம்பர் (பெர்னாமா) -- மடானி அரசாங்கத்தின் 2TM எனும் ஈராண்டு மடானி திட்டம் இன்று தொடங்கியுள்ளது.

அத்தியாவசிய பொருள்களான, சமையல் எண்ணெய், அரிசி மற்றும் முட்டை போன்று போன்றவற்றை நியாயமான விலையில் வழங்கும், இந்த ரஹ்மா மடானி விற்பனை திட்டம் தொடர்ந்து மக்களின் தேர்வாகி உள்ளது.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் காலை மணி 9 தொடங்கிய இந்த விற்பனை திட்டத்தில், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் 10 முதல் 30 விழுக்காடு கழிவில் விற்கப்படுகிறது.

B40 மற்றும் M40 பிரிவினர் பயனடையும் வகையில் ரஹ்மா மடானி விற்பனை திட்டத்தை செயல்படுத்துவதில் அரசாங்கத்தின் முயற்சிகள் தொடர வேண்டும் என்று விற்பனை தளத்திற்கு வருகைத் தந்திருந்த சிலர் பெர்னாமாவிடம் கூறினர்.

அதோடு, அரச மலேசிய போலீஸ் படையின் அபராதங்களை செலுத்த வந்தவர்களும் இங்கு பொருள்கள் வாங்குவதில் ஆர்வமாக இருந்தனர்.

''என்னை பொருத்தவரை, விலை நியாயமாக உள்ளது. உண்மையில் மலிவாக உள்ளது,'' என்றார் ஃப்ர்டாவுஸ் அப்துல்லா என்பவர்.

''அபராதம் செலுத்த வந்தேன். அப்போது இங்கு மக்கள் விற்பனை செய்வதை பார்த்தேன்,'' என்று தாஷா எர்மலிசா முஹ்மட் யூசோப் என்பவர் குறிப்பிட்டார்.

ஐந்து கிலோ கிராம் எண்ணெய் 21 ரிங்கிட் 90 சென்னுக்கும், ஐந்து கிலோ கிராம் அரிசி 15 ரிங்கிட்டிற்கும் 30 A கிரேட் முட்டை 10 ரிங்கிட்டிற்கும் விற்கப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)