பிரேசில், 25 நவம்பர் (பெர்னாமா) -- அலகோவாஸ் மாநிலத்தில் உள்ள தொலைதூர மலைப்பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் 23 பேர் உயிரிழந்தனர்.
மேலும், பலர் காயத்திற்கு ஆளாகினர்.
இவ்விபத்தில், 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றப்பின் உயிரிழந்ததை மீட்புச் சேவைப் பிரிவினர் உறுதிப்படுத்தியதாக அலகோவாஸ் மாநில அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்தின்போது, அப்பேருந்தில் 40 பயணிகளை இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யூனியாவோ டோஸ் பால்மாரெஸ் நகருக்கு அருகில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
இத்துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாக மாநில ஆளுநர், பாலோ டான்டாஸ் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)