உய்வாங், 17 ஜனவரி (பெர்னாமா) -- சியோல் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யோல் விசாரணையில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், அவரது தடுப்புக் காவலை நீட்டிக்கும்படி சியோல் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைக்கப்படும் என்று தென் கொரிய ஊழல் தடுப்பு நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தென் கொரியா மற்றும் அமெரிக்க கொடிகளை ஏந்தியவாறு யூன் சுக் யோலின் ஆதரவாளர்கள் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த தடுப்பு மையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த டிசம்பர் தொடக்கத்தில் தென் கொரியாவில் இராணுவ ஆட்சியை அறிவித்தது தொடர்பில் விசாரணக்காக கைது செய்யப்பட்ட முதல் அதிபர் இவராவார்.
விசாரணைக்காக யூனை நீண்ட காலம் தடுப்பு காவலில் வைக்க வேண்டும் என்றால் தடுப்பு காவல் ஆணையை 20 நாட்களுக்கு நீட்டிக்க சி.ஐ.ஓ எனும் உயர் அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலகத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]