பொது

ஆழமான விவாதங்களுடன் ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் தொடங்கியது

18/01/2025 05:34 PM

லங்காவி, 18 ஜனவரி (பெர்னாமா) -- அமைச்சர்கள் அளவிலான கூட்டத்திற்கு முன்னதாக வட்டார பிரச்சனைகள், திட்டங்களை வகுப்பது மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகளின் நிலைப்பாடுகளை ஒருங்கிணைப்பது குறித்த ஆழமான விவாதங்களுடன் ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் இன்று காலை தொடங்கியது.

வெளியுறவு அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ அம்ரன் முஹமட் ஜின்னின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம், நாளை நடைபெறவிருக்கும் ஆசியான் வெளியுறவு அமைச்சர் மாநாட்டிற்கான முக்கிய தயார்நிலை சந்திப்பாக அமைகிறது.

லங்காவி அனைத்துலக மாநாட்டு மையத்தில் இந்த ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது.

அதில் ஆசியான் வெளியுறவு அமைச்சர்களிடையே உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பின் அடித்தளமாகவும் அது அமைந்திருந்தது.

ஆசியானின் பத்து உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் திமோர் லெஸ்தெவின் பார்வையாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனிடையே, மியன்மாரைப் பிரதிநிதித்து அரசியல் சாராத நபர் ஒருவர் கலந்து கொண்டார்.

''உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை'' எனும் கருப்பொருளில் நடைபெறும் ஆசியான் மாநாட்டிற்கு தலைமையேற்றிருக்கும் மலேசியாவின் முன்னுரிமைகள் குறித்து அதில் முக்கியத்துவம் வழங்கப்படும் என்று வெளியுறவு அமைச்சு அறிக்கையின் வழி தெரிவித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)