மியாவாடி, 27 பிப்ரவரி (பெர்னாமா) -- இணைய மோசடி மையங்களில் இருந்து காப்பாற்றப்பட்ட 7,000 க்கும் மேற்பட்டோர் மியன்மார் எல்லையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து, சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து மனித கடத்தல் நடவடிக்கையின் மூலம் அவர்கள் அனைவரும் மோசடி மையங்களில் பணிபுரிய கட்டாயப்பட்டுப்பட்டனர்.
மோசடி மையங்களில் இருந்து காப்பாற்றப்பட்டவர்களின் அடையாளத்தை உறுதி செய்து, அவர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடவடிக்கையில் தாமதம் ஏற்படுவதாக, மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர்.
ஒரு நாளில் 500 பேரை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப மியன்மார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த மோசடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வர, அந்தந்த நாடுகளே நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களைச் சொந்த நாட்டிற்கு அழைத்து வர, தயக்கம் காட்டுவதே அதற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)