விளையாட்டு

இந்தியன் வெல்ஸ்; எலினா ஸ்விடோலினா அரையிறுதிக்கு தேர்வு

13/03/2026 06:54 PM

கலிஃபோர்னியா, 13 மார்ச் (பெர்னாமா) --  மகளிருக்கான பிரிவில் எலினா ஸ்விடோலினா அரையிறுதிக்கு தேர்வாகினார்.

நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக்குடன் விளையாடிய அவர், 6-2 4-6 6-4 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றார்.

மகளிருக்கான மற்றோர் ஆட்டத்தில், உலகின் முதல் நிலை வீராங்கனை அரினா சபாலென்கா, கனடாவின் விக்டோரியா எம்பகோவுடன் விளையாடினார்.

இந்த ஆட்டத்தில், 7-6 6-4 என்ற புள்ளிகளில் சபாலென்கா வெற்றி பெற்றார்.

அடுத்த ஆட்டத்தில், சபாலென்கா செக் குடியரசின் லின்டா நொஸ்கோவுடன் மோதவுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)