BREAKING NEWS   Super League: PDRM FC 1-6 Negeri Sembilan FC | 
 பொது

ஜோகூர் சமூகத்தின் உணர்வை நிலைநிறுத்தி, ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவோம் - ஓன் ஹஃபிஸ்

13/03/2026 06:41 PM

ஜோகூர் பாரு, 13 மார்ச் (பெர்னாமா) -- வெற்றியை அனைவரும் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ளவும், மாநிலத்தில் நல்லிணக்கம் மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், ஜோகூர் சமூகம் தங்களின் உணர்வைத் தொடர்ந்து பராமரிக்கவும், ஒருவருக்கொருவர் ஒற்றுமையை வலுப்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வரும் மார்ச் 15-ஆம் தேதி, தனது நிர்வாகத்தின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஜோகூர் மக்களிடம் தாம் தெரிவிக்க விரும்பும் முக்கியமான செய்தி அதுவென்று மந்திரி புசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி கூறினார்.

''ஜோகூர் தொடர்ந்து முன்னேறுவதற்கு, சமூகத்தின் ஒருமைப்பாட்டு அம்சம் மிகவும் முக்கியமானது. ஏனெனில், ஒற்றுமை ஒரு வலிமையை உருவாக்கும்,'' என்று
அண்மையில், ஜோகூர் மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லமான சௌஜானாவில், பெர்னாமா தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ்-சின் தலைமையில் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணலின்போது, ஓன் ஹஃபிஸ் தெரிவித்தார்.

அண்மையக் காலமாக, வேறு சில மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, மதம் மற்றும் சமூகம் சம்பந்தமான பிரச்சனைகள் குறைவாகவே உள்ள மாநிலமாக ஜோகூர் கருதப்படுகிறது.

வெளிநாடுகளில் ஏற்பட்டிருக்கும் பிளவுகள் மற்றும் கலவரங்களை உதாரணமாக கூறிய அவர், அது நாட்டின் நிலைத்தன்மையை இழக்கச் செய்வதோடு, பொருளாதாரம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளையும் பாதிக்கிறது.

அரச கழகத்தினால் உருவான ஜோகூர் சமூகத்தின் தனித்துவமான கொள்கை, மாநிலத்தில் மத ஒற்றுமையும் சமூக அமைதியையும் பாதுகாக்கும் முக்கிய காரணமாகும் என்றும் ஓன் ஹஃபிஸ் கூறினார்.

1920-ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட ஜோகூர் சமூகம் எனும் கொள்கை, இம்மாநிலத்தில் வசிக்கும் மற்றும் வருமானம் ஈட்டும் பல இனங்களைச் சேர்ந்த மக்களிடையே ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எப்போதும் வலியுறுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

"இருப்பினும், நல்லிணக்கத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது, மாறாக அனைத்து தரப்பினராலும் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும்.

"இது நாம் முன்னதாக கடந்து வந்த தனித்துவமான மற்றும் சிறப்பு வாய்ந்த விஷயங்களில் ஒன்றாகும். ஆனால் நாம் அதைப் பாதுகாக்க வேண்டும். இது இயற்கையாக வரும் ஒன்றல்ல. அந்த நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு நாம் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டிய ஒன்று. இப்படியே இருக்க முடியும் என்று நம்புகிறோம்,'' என்று ஓன் ஹஃபிஸ் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)