உலகம்

இந்தியா, மொரிசியஸ் உறவை மேம்படுத்தும் வியூக பங்காளித்துவம் - மோடி

13/03/2025 05:32 PM

போர்ட் லூயிஸ், 13 மார்ச் (பெர்னாமா) --   நேற்று, மொரிசியஸ் பிரதமர் நவின்சந்திரன் ராம்கூலமுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய தெற்கு பகுதிக்கான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பான தொலைநோக்குச் சிந்தனையை எடுத்துரைத்தார்.

வர்த்தக மேம்பாடு, நிலையான வளர்ச்சித் திறன் மற்றும் எதிர்காலத்திற்கான இருவழி பாதுகாப்பு அம்சங்கள் அதில் உள்ளடக்கியிருப்பதாக மோடி தெரிவித்தார்.

கடல்சார் பாதுகாப்பு, தேசிய நாணயங்களில் வர்த்தகம் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வழங்கும் பல முக்கிய ஒப்பந்தங்களில், இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

இந்தியா மற்றும் மொரிசியஸ் ஆகிய இரு நாடுகளுக்கான உறவை மேம்படுத்துவதற்கான வியூக பங்காளித்துவம் வழங்கப்படும் என்றும் மோடி கோடிக்காட்டினார்.

முன்னதாக, போர்ட் லூயிசில் நடைபெற்ற மொரிசியஸ் நாட்டின் 57-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)