விளையாட்டு

இங்கிலாந்து பூப்பந்து போட்டி; சி ஃபெய் - நூர் இசுடின் அடுத்த சுற்றுக்குத் தேர்வு

13/03/2025 06:30 PM

பர்மிங்காம், 13 மார்ச் (பெர்னாமா) - All England பூப்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று நாட்டின் ஆடவர் இரட்டையர் கோ சி ஃபெய் - நூர் இசுடின் முஹமட் ரும்சானி ஜோடி அடுத்த ஆட்டத்திற்கு முன்னேறியது.

தென் கொரியாவின் கிம் கி ஜுங் - கிம் ச ராங் ஜோடியுடன், கோ சி ஃபெய் - நூர் இசுடின் மோதினர்.

இந்த ஆட்டத்தில், 21-17, 21-14  என்ற புள்ளிகளில் Gi Jung-Sa Rang இணையினரை SZE FEI - NUR IZZUDDIN தோற்கடித்தனர்.

இந்த ஆட்டம் 37 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்தது.

மகளிர் இரட்டையர் பிரிவில், தேசிய விளையாட்டாளர்கான பெர்லி டான் - எம்.தீனா, தைவானின் Teng Chun Hsun-Yang Chu Yun  ஜோடியுடன் மோதினர்.

சற்று கடுமையான சவாலை எதிர்கொண்ட பெர்லி டான் - எம்.தீனா ஜோடி, 65 நிமிடங்கள் கழித்து இவ்வாட்டத்தை 19-21, 21-15, 21-13 என்ற புள்ளிகளில் கைப்பற்றினர்.

இதனிடையே, நாட்டின் கலப்பு இரட்டையரான Chen Tang Jie-Toh Ee Wei அடுத்த சுற்றுக்கு தேர்வாகும் வாய்ப்பை இழந்தனர்.

இந்தோனேசிய விளையாட்டாளர்களுடன் மோதிய அவர்கள்,  21-18, 20-22, 11-21 என்ற புள்ளிகளில் தோல்வியுற்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)