சபா, டிசம்பர் 29 (பெர்னாமா) -- சபா சரவாக் முழுவதும் கடந்த ஜனவரி தொடங்கி மேற்கொள்ளப்பட்ட தொடர் அமலாக்க நடவடிக்கைகளின் மூலம் வரி உட்பட 71 லட்சத்து 20,000 ரிங்கிட் மதிப்புடைய 55 வாகனங்களை லாபுவான் அரச மலேசிய சுங்கத் துறை JKDM பறிமுதல் செய்தது.
2017-ஆம் ஆண்டு விலக்களிக்கப்பட்ட சுங்க வரி உத்தரவு பிரிவு 14-இன் நிபந்தனைகளை மீறிய வாகன உரிமையாளர்களை குறிவைத்து அத்துறையின் நடவடிக்கைக் குழுவால் இப்பறிமுதல் மேற்கொள்ளப்பட்டது.
பிரிவு 14-இன் கீழ் லங்காவி மற்றும் லாபுவான் போன்ற வரி இல்லாத தீவுகளில் வாங்கப்பட்ட ஓராண்டில் 90 நாட்கள் மட்டும் வரி விதிக்கப்படும் பகுதிகளுக்குள் கொண்டு வர அனுமதிக்கப்படுவதாக லாபுவான் சுங்கத் துறை இயக்குநர் அஸ்பைலா அக் துவா தெரிவித்தார்.
அந்த விலக்கு அளிப்பின் கீழ் வழங்கப்பட்ட சலுகைகளை பயன்படுத்தி அனைத்து வாகனங்களும் முதன்மை சுங்கப் பகுதிக்குள் கொண்டு வரப்பட்டன.
ஆனால், அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்த பிறகும் அவை வரிவிலக்கு தீவுகளுக்குத் திரும்ப கொண்டு செல்லப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு ரகத்திலான அவ்வாகனங்கள் அனைத்தும் 1967-ஆம் ஆண்டு சுங்கச் சட்டம் செக்ஷன் 135(1)(d)-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது விசாரணையில் உள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)