எல்-குனா, 13 ஏப்ரல் (பெர்னாமா) -- எல்-குனா (EL GOUNA) அனைத்துலக ஸ்குவாஷ் போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு தேசிய மகளிர் ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி முன்னேறியுள்ளார்.
உலகத் தர வரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் அவர் சகநாட்டவரான ஐரா அஸ்மானை 11-4, 11-5 மற்றும் 11-3 என நேரடி செட்களில் வீழ்த்தினார்.
இந்த ஆட்டம் வெறும் 17 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்தது.
எகிப்தின் எல்-குனா ஸ்குவாஷ் அரங்கில் இப்போட்டி நடைபெற்று வருகிறது.
ஐரா அஸ்மானுக்கு எதிராக விளையாடிய சிவசங்கரிக்கு இது மூன்றாவது வெற்றியாகும்.
முன்னதாக, 2023-ஆம் ஆண்டு துவாங்கு முஹ்ரிஸ் கிண்ணம் மற்றும் 2025-ஆம் ஆண்டு நியூசிலாந்து பொது ஸ்குவாஷ் போட்டிகளில் சிவசங்கரி, ஐராவைத் தோற்கடித்துள்ளார்.
சிவசங்கரியை அடுத்து, நாட்டின் மற்றொரு மகளிர் ஸ்குவாஷ் வீராங்னையான ரேச்சல் அர்னால்ட், உபசரணை நாட்டின் செய்னா மிக்காவியை 11-5, 11-8, 11-13, 10-12 மற்றும் 11-5 என்ற நிலையில், 50 நிமிடங்களில் தோற்கடித்தார்.
அடுத்த சுற்றில் ரேச்சல் அமெரிக்க போட்டியாளருடன் மோதவிருக்கின்றார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)