விளையாட்டு

உலகின் முதல் நிலை வீராங்கனை சபலென்காவை வீழ்த்தினார் ஆஸ்டாபென்கோ

22/04/2025 11:47 AM

ஸ்டுட்கார்ட், 22 ஏப்ரல் (பெர்னாமா) -- ஸ்டுட்கார்ட் பொது டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலென்காவை தோற்கடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் லத்வியாவின் இலினா ஆஸ்டாபென்கோ

உலகத்தர வரிசையில் 24-வது இடத்தில் உள்ள அவர் சபலென்காவை நேரடி செட்களில் வீழ்த்தி, தமது டென்னிஸ் வாழ்வில் ஒன்பதாவது பட்டத்தையும் கைப்பற்றினார்.

26 வயதான ஆஸ்டாபென்கோ போட்டி முழுவதும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில்,6-4, 6-1 என்று மிக எளிதில் அரினா சபலென்காவை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்தார்.

கடந்த ஐந்து பருவங்களில் ஸ்டுட்கார்ட்டில் நடைபெற்ற நான்கு இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்துள்ள சபலென்காவுக்கு இது மீண்டும் ஒரு மிகப்பெரிய தோல்வியாகி உள்ளது.

2024 அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் பட்டங்களை வென்றிருந்த சபலென்கா, 2023 மெட்ரிட் போட்டிக்குப் பிறகு களிமண் தரையில் இன்னும் வாகை சூட முடியாமல் உள்ளது.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)