பொது

போதைப் பொருள் வழக்கு; மரணத் தண்டனையிலிருந்து அறுவர் விடுதலை

18/03/2026 05:43 PM

ஈப்போ, 18 மார்ச் (பெர்னாமா) -- கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மரணத் தண்டனையை எதிர்நோக்கி இருந்த ஐந்து சகோதர்கள் உள்ளிட்ட வெளிநாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் உட்பட அறுவர் அவ்வழக்கிலிருந்து இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

26 வயது ஸ்ரீதரன் சரவணன், 27 வயது சுதேந்திரன் சரவணன், 23 வயது அர்வின் சரவணன், 24 வயது சுதேசன் சரவணன், 29 வயது ரதீஸ்வரன் சரவணன் மற்றும் வெளி நாட்டைச் சேர்ந்த 26 வயது கியாவ் (kyaw) ஆகியோரே இவ்வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.

கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ஆம் தேதி காலை மணி 9.15-இல் இருந்து 9.20-க்குள், பேராக், பாத்தாங் பாடாங் மாவட்டத்தில் உள்ள சென்டிரியாங் லோ ட் எண். 11878-இல், 14199.1 கிராம் எடையுள்ள methamphetamine வகை போதைப் பொருளை வைத்திருந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரத்தை நிரூபிக்கத் தவறியதால் அந்த அறுவரையும் விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]