உலகம்

போப்பாண்டவர் பிரான்சின் நல்லுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு

23/04/2025 01:36 PM

ரோம், 23 ஏப்ரல் (பெர்னாமா) --    காலஞ்சென்ற கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சின் இறுதி சடங்கு வரும் 26-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அவரின் நல்லுடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போப்பாண்டவரின் இறுதிசடங்குத் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக, கார்டினல் எனப்படும் கத்தோலிக்க திருச்சபையின் மதகுருமார்கள் நேற்று ஒன்று கூடினர்.

இதில், போப் பிரான்சிசின் இறுதி சடங்கை வரும் 26ம் தேதி நடத்துவது என்றும், போப்பாண்டவரின் நல்லுடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்வது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

போப்பாண்டவரின் விருப்பப்படி அவரது உடல் வாடிகனுக்கு வெளியே ரோம் நகரில் உள்ள செயின்ட் மேரி மேஜர் பசிலிக்கா தேவாலாயத்தில் 26-ஆம் தேதி காலை 10 மணிக்கு அடக்கம் செய்யப்படும்.

இறுதி சடங்கிற்குப் பிறகு ஒன்பது நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.

2013-ஆம் ஆண்டு போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்ட பிரான்சிஸ் கடந்த 12 ஆண்டு காலமாக சேவையாற்றி வந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)