புத்ராஜெயா, 24 ஏப்ரல் (பெர்னாமா) -- இன்று வெளியிடப்பட்ட எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளின் பகுப்பாய்வு அறிக்கையில், ஜாலூர் கெமிலாங் தவறாக பிரசுரிக்கப்பட்டது குறித்து கல்வி அமைச்சு (கே.பி.எம்) விரிவான விசாரணையை நடத்தி வருகிறது.
சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜாலூர் கெமிலாங் நாட்டின் மகத்துவம் வாய்ந்ததாகவும் இறையாண்மையின் சின்னமாகவும் இருப்பதால் இந்தத் தவறை ஏற்றுக் கொள்ள முடியாதது என்று KPM குறிப்பிட்டுள்ளது.
கே.பி.எம் இதற்கு மன்னிப்புக் கோரியிருப்பதோடு, பிரசுரிக்கப்பட்ட பகுப்பாய்வு அறிக்கையை திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டு உடனடி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னதாக, 14 மற்றும் 15 ஆம் பக்கங்களில் உள்ள பல படங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதோடு, அதில் ஜாலூர் கெமிலாங் தவறாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)