பொது

அவமதிப்பு & இனவெறியை தூண்டும் தகவல்அனுப்பிய உணவு விநியோக நபர் விசாரணை

24/04/2025 05:06 PM

கோலாலம்பூர், 24 ஏப்ரல் (பெர்னாமா) -- உணவு விநியோகச் செயலி மூலம் அவமதிக்கும் மற்றும் இனவெறியை தூண்டும் வகையில் தகவல்களை அனுப்பிய உணவு விநியோக நபரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 298 மற்றும் 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்‌ஷன் 233-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாக, பெர்னாமா தொடர்பு கொண்ட போது மத்திய செபெராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.

உணவு விநியோகம் செய்பவரின் செயல் கண்டிக்கத்தக்கது என்றும் அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததது என்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரோன் அகோ டாகாங் முன்னதாக நேற்று கூறியிருந்தார்.

உணவு விநியோக செயலி மூலம், உணவு விநியோகம் செய்யும் நபர் ஒருவர் அவமதிக்கும் மற்றும் இனவெறியை தூண்டும் வகையில் தகவல்களை அனுப்பியதாக ஆசிரியர் ஒருவர் முன்னதாக போலீஸ் புகார் அளித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)