பொது

நபிகள் நாயகம் & இஸ்லாத்தை அவமதித்ததாக ஆடவர் மீது குற்றப்பதிவு   

24/04/2025 05:19 PM

நபிகள் நாயகம் & இஸ்லாத்தை அவமதித்ததாக ஆடவர் மீது குற்றப்பதிவு   

கோலாலம்பூர், 24 ஏப்ரல் (பெர்னாமா) - நபிகள் நாயகம் மற்றும் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகளைத் தமக்குச் சொந்தமான முகநூல் கணக்கில் பதிவிட்டதாக நம்பப்படும் நபரிடமிருந்து மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் எம்சிஎம்சி வாக்குமூலம் பதிவு செய்தது. 

ஏப்ரல் 20-ஆம் தேதி ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் 63 வயதுடைய ஆடவரிடமிருந்து வாக்குமூலப் பதிவும் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் எம்சிஎம்சி குறிப்பிட்டுள்ளது. 

தடயவியல் பரிசோதனைக்காக அச்சந்தேக நபர் பயன்படுத்திய கைத்தொலைபேசி மற்றும் சிம் அட்டையை எம்சிஎம்சி பறிமுதல் செய்தது.

இவ்வழக்கின் முடிவை பெறும் வகையில் அதன் விசாரணை அறிக்கை அரசு தரப்பு துணை வழக்கறிஞரிடம் கூடியவிரைவில்  ஒப்படைக்கப்படும். 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 500,000 ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது அதிகபட்சம் ஈராண்டுகள் சிறை அல்லது அவ்விரண்டுமே விதிக்க வகைச் செய்யும் சட்டம் 588 செக்‌ஷன் 233-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)