புக்கிட் ஜாலில், 01 மே (பெர்னாமா) - இனம், நிறம் அல்லது மத நம்பிக்கை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் இந்நாட்டில் தொழிலாளர்களின் நலனை மிகச் சிறந்த நிலைக்கு உயர்த்துவதைத் தொடர மடானி அரசாங்கம் உறுதியாக உள்ளது.
இன வேறுபாடுகள் மற்றும் அரசியல் நம்பிக்கைகளிலிருந்து உருவாகும் பிளவுகளை அனுமதிக்கக் கூடாது என்றும், இவை உற்பத்தித்திறன் மற்றும் சேவைக்கு இடையூறாக விளங்கும் என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொழிலாளர்களுக்கு நினைவூட்டினார்.
''அந்த நாட்டில், அந்தக் கண்டத்தில், இனம், மதவெறி, வெறுப்பு, குறுகிய நம்பிக்கைகள், நாடு பிளவுபட்டிருப்பதாலும், மக்கள் ஏழைகளாக இருப்பதாலும் மக்கள் பிளவுபட்டுள்ளனர் என்ற செய்திகளை நாம் தினமும் படிக்கிறோம். அந்தச் சுவர்களை நாம் தகர்க்க வேண்டும்,'' என்றார் அவர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)