பொது

மக்களின் நல்வாழ்வை வலியுறுத்தும் மடானி அரசாங்கக் கொள்கைக்கு ஏற்ற முயற்சிகளில் தொடர்பு அமைச்சு கவனம்

21/12/2025 05:15 PM

புத்ராஜெயா, டிசம்பர் 21 (பெர்னாமா) -- நீதி மற்றும் மக்களின் நல்வாழ்வை வலியுறுத்தும் மடானி அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவது அரசாங்கத்தின் தகவல்களை வழங்குவதை மேம்படுத்துவது மற்றும் 2026ஆம் ஆண்டின் இலக்கிடப்பட்ட குழுக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஆகியவற்றுக்கான முயற்சிகளில் தொடர்பு அமைச்சு கவனம் செலுத்தும்.

சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மட்டுமின்றி பெற்றோகளையும் சமூகத்தையும் இலக்கு வைத்து பாதுகாப்பான இணையப் பிரச்சாரம் 2.0ஐ அமைச்சு செயல்படுத்தும் என்று அதன் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

''வேகமான மற்றும் மலிவான இணையத்தை வழங்குவதில் மட்டும் நாம் வெற்றிப் பெற்றாலும், பாதுகாப்பான இணையம் இல்லை என்றால் எனக்கு குற்ற உணர்வாக உள்ளது. அதனால்தான், பாதுகாப்பான இணையப் பிரச்சாரம் 2.0 சிறார்களுக்கு மட்டும் அல்ல. பெற்றோருக்கும் நடத்தப்படும்'', என்றார் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில்.

பெர்னாமாவுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

பெர்னாமாவின் தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜு துரை ராஜ், செய்தி சேவைகளின் துணைத் தலைமை செய்தி ஆசிரியர் முஹமட் ஷுக்ரி இஷாக், பொருளாதார சேவை நிர்வாக ஆசிரியர் எம். சரஸ்வதிஆகியோர் இந்த நேர்காணலுக்குத் தலைமையேற்றனர்.

இணையப் பகடிவதை, இயங்கலையில் மோசடி, மற்றும் இலக்கவியல் தளத்தைத் தவறாகப் பயன்படுத்துவது போன்ற ஆபத்துகளில் இருந்து சிறார்களைப் பாதுகாப்பதில் பெற்றோரின் பங்கு உட்பட இலக்கவியல் பாதுகாப்பு குறித்த விரிவான புரிதலை வழங்குவதற்காக நாடு முழுவதும் தொடர் பயணங்களை மேற்கொண்டு பாதுகாப்பான இணையப் பிரச்சாரம் 2.0 மிகப்பெரிய அளவில் செயல்படுத்தப்படும் என்று ஃபஹ்மி கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை