புத்ராஜெயா, 02 மே (பெர்னாமா) -- கோலாலம்பூரில், கொசொவோ தூதரகத்தைத் திறக்கும் நடவடிக்கை, அந்நாட்டிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய தருணமாக கருதப்படுகிறது.
இப்புதிய தூதரகத்தின் வழியாக வர்த்தகம், முதலீடு, கல்வி, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளின் நிர்வகிப்புகளை எளிதாக்கும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.
''இது நிச்சயமாக நமது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு, கல்வி, கலாச்சாரம், சுற்றுலா ஆகியவற்றை எளிதாக்கும். நிச்சயம் இதில் ஹலால் தயாரிப்புகளும் அடங்கும். ஏனெனில், மலேசியாவில் ஹலால் சான்றிதழ் அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது'', என்று அவர் கூறினார்.
மலேசியாவுக்கான நான்கு நாள்கள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டிருக்கும் கொசோவோ அதிபர் டாக்டர் ஜோசா ஒஸ்மானி சத்ரியுடன் இணைந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)