உலகம்

மாஸ்கோ: எரிவாயு வெடிப்பில் இருவர் பலி

05/05/2025 05:27 PM

மாஸ்கோ, 05 மே (பெர்னாமா) -- நேற்று ஞாயிற்றுக்கிழமை மாஸ்கோவில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீச்சம்பவத்தில் இருவர் பலியாகினர்.

மேலும், பலர் தீக்காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவத்தினால் ஓர் அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்ததோடு, அருகிலுள்ள மற்ற கட்டிடங்களிலும் அதன் தாக்கத்தையும் சத்தத்தையும் உணர முடிந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் வெடிப்பு நிகழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்ததாக ரஷ்ய டெலிகிராம் அலைவரிசையான SHOT வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதோடு, வெடிப்புக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக ரஷ்ய அவசரகால அமைச்சு தெரிவித்துள்ளது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]