வாஷிங்டன் டி.சி, 05 மே (பெர்னாமா) -- அமெரிக்காவிற்கு வெளியில் தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று, ஞாயிற்றுக்கிழமை இந்த அறிவிப்பைச் செய்துள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளர்களை ஈர்ப்பதற்காக பிற நாடுகள் பல சலுகைகளை வழங்குவதால் அமெரிக்காவின் திரைப்படத் துறை மிக வேகமாக அழிந்து கொண்டிருப்பதை டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
எனவே, நாட்டிற்குள் திரையிடப்படும் மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் வரி விதிப்பு செயல்முறையை விரைவில் மேர்கொள்ள டிரம்ப், அமெரிக்க வர்த்தக துறைக்கும் வர்த்தக பிரதிநிதிக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அதோடு, அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வெளிநாடுகள் வழங்கும் சலுகைகளை, நாட்டின் பாதுகாப்பிற்கு எதிரான அச்சுறுத்தலாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றை ஒருவிதமான தகவல் மற்றும் பிரச்சாரம் என்று டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]