உலகம்

இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தைத் தணிக்க ஈரான் முயற்சி

05/05/2025 05:41 PM

பாகிஸ்தான், 05 மே (பெர்னாமா) -- இஸ்லாமாபாத் மற்றும் புது டெல்லி இடையே நீடித்து வரும் பதற்றத்தைத் தணிக்க ஈரான் வெளியுறவு அமைச்சர், அப்பாஸ் அராக்ச்சி திங்கட்கிழமை பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார்.

கடந்த மாதம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் சுற்றுப்பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானிற்கும் இந்தியாவிற்கும் இடையில் கடும் மோதல் நீடித்து வருகிறது.

சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் சுற்றுப்பயணிகள் மீது நடத்தப்பட்ட அத்தாக்குதலினால் பதட்டங்கள் வெடித்த பிறகு, பாகிஸ்தானிற்கு பயணம் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பிரமுகர் அப்பாஸ் அராக்ச்சி என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அணு ஆயுதம் ஏந்திய அந்த அண்டை நாடுகளுக்கு இடையிலான பதட்டங்களைத் தணிக்க உதவுவதாக தெஹ்ரான் தெரிவித்த சில நாட்களுக்குப் பிறகு அவரின் இப்பயணம் அமைந்துள்ளது.

இஸ்லாமாபாத்திற்கு அருகிலுள்ள ராவல்பிண்டியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கிய அராக்ச்சியை பாகிஸ்தான் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.

அவர் பாகிஸ்தான் பிரதமர் இஷாக் டார், அதிபர் அசிஃப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் ஆகியோரை சந்திக்க உள்ளார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]