உலகம்

ஸ்கைப் செயலி மூடு விழா கண்டது

06/05/2025 06:31 PM

லக்சம்பர்க், 06 மே (பெர்னாமா) -- கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக உலகெங்கிலும் உள்ள மக்களை இணைக்கும் சேவையை வழங்கி வந்த ஸ்கைப் (SKYPE) செயலி நேற்றுடன் மூடு விழா கண்டது.

2003-ஆம் ஆண்டு இச்செயலி இணையப் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டது.

காணொலி வடிவிலும், குரல் அழைப்பிலும் உலகம் முழுவதும் உள்ள மக்களை இச்செயலி மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

2010-ஆம் ஆண்டில், ஒரு மாதத்திற்கு 30 கோடி பேர் இச்செயலியைப் பயன்படுத்தினர்,

சூம் (ZOOM) அல்லது ஃபேஸ்டைம் (FACETIME) போன்ற செயலிகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னர் எல்லைகளைத் தாண்டி தொடர்பு கொள்ளும் முறையை ஸ்கைப் மாற்றியது.

2011-ஆம் ஆண்டு, 850 கோடி அமெரிக்க டாலருக்கு ஸ்கைப் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)