காஷ்மீர், 07 மே (பெர்னாமா) -- பொது மக்கள் தங்கும் பகுதிகள், வழிப்பாட்டுத் தளங்கள் மீது இந்தியா கோழைத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியியுள்ளது.
இத்தாக்குதலில் பெண்களும் குழுந்தைகளும் உயிரிழந்திருப்பதாக பாகிஸ்தான் சாடியிருக்கிறது.
இந்தியாவின் தாக்குதலுக்கு வலுவான பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமை உள்ளதாக அதன் தகவல் அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் இப்போது மிகவும் திறம்பட பதிலளிக்கும். எந்த தவறும் செய்யாதீர்கள். ஏனென்றால் அமைதிக்கான விருப்பத்தை எங்களின் (பாகிஸ்தான்) பலவீனமாக தவறாகக் கருதக்கூடாது.என்றார் அவர்.
இந்தியாவின் ஐந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவப் பேச்சாளர் ஷரீஃப் சௌத்ரி தெரிவித்திருக்கிறார்.
இதுவரை, மூன்று ரஃபேல், ஒரு SU-30, ஒரு MiG-29 மற்றும் ஒரு ஹெரான் ட்ரோன் உட்பட ஐந்து இந்திய விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என்பதை நான் உங்களுக்கு உறுதிப்படுத்த முடியும் என்று பாகிஸ்தான் இராணுவப் பேச்சாளர் ஷரீஃப் சௌத்ரி தெரிவித்தார்.
இருப்பினும், இந்தியாவின் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் மேற்கொண்ட எதிர்வினைகள் குறித்து அவர் விவரிக்கவில்லை.
பாகிஸ்தான் காராய்ச்சியில் உள்ள ஜின்னா அனைத்துலக விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மற்றொரு நிலவரத்தில், காஷ்மீர் எல்லை பகுதியில் இந்திய இராணுவமும் பாகிஸ்தான் இராணுவமும் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில், இந்தியாவைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு கருதி, ஆபத்தான பகுதிகளிலிருந்து குடிமக்களை வெளியேற்ற இந்திய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வெளியேற்றப்பட்டவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)