உலகம்

லாரூர்-அம்ரித்சார் இருவழி விமானப் பயணங்கள் இருநாள்கள் ரத்து

07/05/2025 04:32 PM

புத்ராஜெயா, 07 மே (பெர்னாமா) -- பாகிஸ்தான், லாலோர் மற்றும் இந்தியா அம்ரித்சாருக்கான இருவழி விமானப் பயணங்களை, இன்றும் நாளையும் ரத்து செய்வதாக பாத்திக் ஏர் (Batik Air) அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அண்மைய சூழ்நிலையைத் தொடர்ந்து இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்குவதே தங்களின் முன்னுரிமை என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் பாத்திக் ஏர் கூறியுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரத் தரப்புடன் ஒருங்கிணைந்து நிலைமை அணுக்கமாக கண்காணித்து, அண்மைய தகவல்களை அவ்வப்போது வழங்கும் என்றும் அது குறிப்பிட்டது.

இதனிடையே, தற்போது ஏற்பட்டிருக்கும் சிரமத்திற்கு பாத்திக் ஏர் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)