இஸ்லாமாபாத், 06 மே (பெர்னாமா) -- இந்தியாவின் தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் சூளுரைத்துள்ளது.
அண்மையில் காஷ்மீரில் சுற்றுப்பயணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என்று அந்நாடு கூறியிருந்தும், இந்தியா தாக்குதல் நடத்தியிருப்பதாகப் பாகிஸ்தான் சாடியிருக்கிறது.
இந்தியாவின் இத்தாக்குதல் ஒரு கோழைத்தனமான செயல் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்திருக்கிறார்.
"தீவிரவாதிகள் தங்கியிருக்கும் பகுதிகளைக் குறி வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா கூறியுள்ளது. ஆனால் அது பொது மக்கள் தங்கியுள்ள பகுதிகள் ஆகும்.
"எனவே, இந்தியாவின் போர் நடவடிக்கைகளுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமை உண்டு. கடுமையான தாக்குதலை மேற்கொள்ளத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது," என்று அவர் விளக்கினார்.
இத்தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டின் உள்நாட்டு நேரப்படி காலை மணி 10க்கு, பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு மன்றக் கூட்டம் நடத்தப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)