புத்ராஜெயா, 07 மே (பெர்னாமா) -- 1998-ஆம் ஆண்டு தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டம் மறுஆய்வு செய்யப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனையில் மருத்துவச் சேவைகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் இந்தச் சட்டத்திற்கு உட்பட்டது.
இதற்காக முறையான ஆவணங்களைத் தற்போது சுகாதார அமைச்சு தயார் செய்து வருவதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்ததாக ஃபஹ்மி குறிப்பிட்டார்.
மேலும், தனியார் மருத்துவமனைகளில் மருத்துவச் சேவைகளுக்கான கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் ஏழாவது அட்டவணை மதிப்பாய்வு செய்யப்படும்.
இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த விவகாரம் அமைச்சரவையின் பார்வைக்குக் கொண்டு வரப்படும்.
அதன் பின் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் அமைச்சரவை கூட்டத்திற்கு பின் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)