மாதுரு ஓயா, 09 மே (பெர்னாமா) -- இன்று காலை, இலங்கை விமானப் படைக்கு சொந்தமான Bell 212 ரக ஹெலிகாப்டர், வட மத்திய வட்டாரத்தின் மாதுரு ஓயா நீர்த் தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், ஆறு இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
அவசர தரையிறக்கம் செய்ய முயன்றபோது இவ்விபத்து நிகழ்ந்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது.
விமானப் படையின் 7-வது பிரிவுக்கு சொந்தமான இந்த ஹெலிகாப்டர், இரண்டு விமானிகள் உட்பட 12 பேருடன், இன்று காலை மணி 6:44 அளவில், ஹிங்குராக் கோடா விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டது.
இலங்கை விமானப்படை வீரர்களின் பயிற்சி நிறைவு விழாவின்போது, ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக இவ்விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)