புது டெல்லி, 09 மே (பெர்னாமா) -- தங்களின் பொறுமையை யாரும் தவறாகப் பயன்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று, இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்ளும் எந்தவொரு தரப்பினரும், 'தரமான நடவடிக்கையை எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக இருக்க வேண்டும்' என்று அவர் கூறினார்.
''பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் எப்போதும் வாதிட்டு வருகிறோம். இருப்பினும், எங்களின் சகிப்புத்தன்மையை யாரும் தேவையில்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இது அர்த்தப்படாது. யாராவது நம் பொறுமையைப் பயன்படுத்திக் கொள்ள முயன்றால், அவர்கள் நேற்று செய்தது போல், ஒரு தரமான செயலை எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக இருக்க வேண்டும்'' என்றார்
இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் எந்த வரம்பும் இருக்காது என்று குறிப்பிட்ட அவர், எதிர்காலத்திலும் இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு பதிலளிக்க தங்கள் தரப்பு முழுமையாக தயாராக இருப்பதாக அவர் நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார்.
முன்னதாக, பாகிஸ்தானுடனான விரோதப் போக்கு குறித்து நாடு முழுவதும் உள்ள பல முக்கிய அரசியல் தலைவர்களிடம் உரையாற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு சிங் தலைமை தாங்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)