உலகம்

பாகிஸ்தானுடன் அதிகரிக்கும் பதற்றம்; முக்கியத் தரப்பினருடன் மோடி சந்திப்பு

10/05/2025 01:38 PM

புதுடெல்லி, 10 மே (பெர்னாமா) -- பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தற்காப்பு அமைச்சர், ஆயுதப்படைத் தலைவர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிறப்பு சந்திப்பை மேற்கொண்டார்.

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் மற்றும் அண்டை மாநிலம் பஞ்சாப்பில் உள்ள சீக்கிய புனித நகரமான அம்ரிட்சாரில், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டிருக்கும் நிலையில் இச்சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.

அத்தாக்குதலில், பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.

அணு ஆயுதம் கொண்ட இந்த இரு அண்டை நாடுகளுக்கு இடையே கடந்த மூன்று நாள்களாக நிகழ்ந்து வரும் சண்டையில், அம்ரிட்சாரில் முதன் முதலாக வெடிப்பு சத்தம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளில், பாகிஸ்தான் மீது மிக கடுமையான தாக்குதலை இந்தியா தொடுத்து வருகிறது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]